மியன்மாரில் சிறுபான்மை மக்களை இலக்கு வைக்கும் இராணுவம்

karen-peopleமியன்மாரில் கடந்த ஐம்பது வருடங்களில் முதல் தடவையாக சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் தேர்வான நாடாளுமன்றம் இன்று ஆரம்பமானது.

ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி, போட்டியிட்டவற்றில் எண்பது வீதமான இடங்களை பெற்றது.

கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்றார்கள்.

மொத்த இடங்களில் கால்வாசி இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய அமைச்சுக்களையும் அது தன்வசம் வைத்திருக்கிறது.

அதேவேளை, இராணுவத்தின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட கிளர்ச்சி மற்றும் ஆயுதக்குழுக்கள் சமாதான ஒப்பந்தங்களை நிராகரித்து வருகின்றன. சிறுபான்மை மக்களின் கிராமங்களும் தாக்கப்படுகின்றன. -BBC