அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ரஷ்ய ராணுவம்: ஆய்வில் தகவல்

russia_nato_001அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் ராணுவத்தை விட ரஷ்யாவின் ராணுவம் பலம் பொருந்தியதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் ராணுவப்படைகள் தொடர்பாக RAND கார்ப்ரேசன் நிறுவனம் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது.

கடந்த 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

ஆய்வின்படி, தனது படைகளின் மூலம் ரஷ்யா மூன்றே நாட்களில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை கைப்பற்ற முடியும்.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை முறியடிப்பதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளிடம் தற்போது போதுமான படைகள் இல்லை என்று தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலையில் நேட்டோவால் தங்கள் உறுப்பு நாடுகளின் எல்லையை வெற்றிகரமாக பாதுகாக்க முடியாது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும்,ரஷ்யாவை தடுக்க வேண்டும் என்றால் அமெரிக்கா அதிகளவு ஆயுதங்களை அப்பகுதியில் குவித்தால் மட்டுமே முடியும்.

முழுமையாக ஆயுதம் ஏந்திய 3 படைகள் உட்பட 7 படைகள்,  போர் விமானங்கள் மற்றும் பீரங்கி ஆகியவையை அங்கு நிறுத்துவது மூலம் இதனை தடுக்க முடியும்.

ஆனால் இதற்காக ஆண்டுக்கு 2.7 மில்லியன் டோலர் வரை செலவு செய்ய வேண்டும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com