ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் இயக்கி வந்த வானொலி நிலையம் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நேற்று அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் “கலீபாவின் குரல்’ (Voice of the Caliphate) என்ற வானொலி நிலையத்தை இயக்கி வந்தனர். அமெரிக்க போர் விமானங்கள் அங்கு, கடந்த திங்கள் அன்று நடத்திய தாக்குதலில் அந்த வானொலி நிலையம் அழிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நங்கர்ஹார் மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ஆப்கானுக்கான அமெரிக்க – நேட்டோ கூட்டுப்படை செய்தித் தொடர்பாளர் மைக் லாஹார்ன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு முதல் தலைதூக்கி வரும் ஐ.எஸ் அமைப்பில் புதிய ஆட்களைச் சேர்ப்பதற்காக, நங்கர்ஹார் பகுதியில் இருந்த வானொலி நிலையத்தின் மூலமாக ஐ.எஸ் தீவிரவாதிகள் வானொலியில் சட்டவிரோதப் பிரசாரம் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-http://www.athirvu.com
சபாஸ் அமெரிக்கா,