சீனாவில் இறுதிச்சடங்கின் போது இறந்த குழந்தை உயிர்பிழைத்துள்ள சம்பவத்தால் பெற்றோர் அதிர்ச்சி கலந்த சந்தோஷம் அடைந்துள்ளனர்.
சீனாவில் கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பெண் ஒருவருக்கு 7 மாதத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததால், -12C அளவில் இன்குபேட்டரில் வைத்து 23 நாட்கள் பாதுகாக்கப்பட்டது. பின்னர் 2 குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்த பெற்றோர்கள், குழந்தை An An- ஐ கவனமாக பார்த்துக்கொண்டனர்.
இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து குழந்தையின் முகத்தின் நிறம் மாறுபட்டு, உடல்நிலை மோசமடைந்தால் மீண்டும் மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், குழந்தையின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதால் அக்குழந்தை இறந்துவிட்டது என்று கூறியுள்ளனர்.
அதை தொடர்ந்து அக்குழந்தையின் உடல் துணிகளால் சுற்றப்பட்டு பாதுகாப்பாக மருத்துவமனையில் உள்ள பிண அறையில் வைக்கப்பட்டது. அங்கு சுமார் 15 மணி நேரம் வைத்திருந்தனர்.
பின்னர், குழந்தையை சவக்கிடங்கில் வைப்பதற்கு முன்னர் சடங்குகள் செய்யப்பட்டபோது, குழந்தை அழுதுள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மீண்டும் மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச்சென்றனர், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனைக்கேட்ட பெற்றோர், அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர்.
-http://world.lankasri.com