ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வடகொரிய ராணுவ தளபதி?: சுட்டுக்கொலை செய்த அதிகாரிகள்

northkorea_south_001வடகொரிய ஜனாதிபதி ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு ராணுவ தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச முன்னணி தொலைக்காட்சி ஒன்றிற்கு பெயர் வெளியிடப்படாத தென்கொரிய ராணுவ அதிகாரி ஒருவர் இன்று பரபரப்பான தகவலை அளித்துள்ளார்.

அதில், ‘ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது, ஊழல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக வடகொரிய ராணுவ தளபதியான ரி யோங் கில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும், அவர் எப்போது கொல்லப்பட்டார் என்ற தகவலை அவர் பகிர்ந்துக்கொள்ளாவிட்டாலும், கடந்த 2 வாரங்களில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரி யோங் கில் கடந்த 2013ம் ஆண்டில் தான் அந்நாட்டு ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து தென் கலிபோர்னிய பல்கலைகழகத்தை சேர்ந்த டேவிட் காங் என்ற பேராசிரியர் கருத்து தெரிவித்துள்ளார்.

‘நான் ஆட்சியிலும், இளமையாகவும் முழு பலத்துடன் இருக்கிறேன் என்பதை அந்நாட்டு பொதுமக்களுக்கும் உலகிற்கும் எடுத்துக்காட்ட சர்வாதிகாரியான கிம் யோங் அன் நிறைவேற்றியது தான் இந்த மரண தண்டனை.

இதன் மூலம், தனக்கு சாதகமாக இருப்பவர்கள் யார், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க கிம் யோங் அன் நடத்திய அதிகார மீறல் தான் இந்த மரண தண்டனை’ என கருத்து தெரிவித்துள்ளார்.

கிம் யோங் அன் அண்மையில் நடத்திய ஏவுகணை பரிசோதனை நிகழ்வுகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சந்திப்பில் ரி யோங் கில் கலந்துக்கொள்ளாமல் இருந்ததை தொடர்ந்து தற்போது இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com