பிரான்ஸ் நாட்டில் 104 வயதினை கடந்தும் இளம்பெண்களை போல் சுறுசுறுப்பாக வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள் தங்களுடைய ஆரோக்கியமான நீண்ட ஆயுளின் ரகசியத்தை உருக்கத்துடன் பகிர்ந்துள்ளனர்.
மத்திய பிரான்ஸில் உள்ள Onzain என்ற நகரில் தான் இந்த இரட்டை சகோதரிகள் வாழ்ந்து வருகின்றனர்.
1912ம் ஆண்டு இந்த இரட்டையரின் தாயாருக்கு மார்ச் மாதம் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஜனவரியில் இவர்கள் இருவரும் பிறந்துள்ளனர்.
அதே சமயம், இவர்களின் எடையும் சராசரியாக இல்லாததால் குழந்தைகள் இருவரும் நீண்ட நாட்கள் வாழ மாட்டார்கள் என மருத்துவர்கள் கூறியது பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால், அனைவரும் ஆச்சர்யம் அடையம் வகையில், இரட்டை சகோதரிகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாக வளர்ந்து தற்போது 104 வயதை எட்டியுள்ளனர்.
Paulette Olivier மற்றும் Simone Thiot என்ற பெயர்கள் உடைய இவர்களில் முதலாவது சகோதரியின் கணவர் 36 வயதிலும், இரண்டாவது சகோதரியின் கணவர் 64 வயதிலும் இறந்து விடுகின்றனர்.
எனினும், இந்த இரு சகோதரிகளுக்கும் குழந்தை பாக்கியமே கிடைக்கவில்லை.
சகோதரிகளின் உடன் பிறந்த ஒரே சகோதரரும் 99 வயதில் ஒரு விபத்தில் காலமானதை தொடர்ந்து Onzain நகரில் குடியேறிய இவர்களை பத்திரிகை ஒன்று நேற்று சந்தித்து பேட்டி எடுத்துள்ளது.
நீண்ட வெள்ளை முடி, தங்கத்தால் தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடிகள் அணிந்தவாறு உற்சாகமாக இருவரும் பேட்டியளித்துள்ளனர்.
’எங்களுடைய நீண்ட ஆயுளுக்கு காரணம் நாங்கள் இதுவரை எந்த காரணத்திற்காகவும் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து செல்லவில்லை.
குழந்தைகள் முதல் இந்த நாள் வரை நாங்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம். ஒன்றாகவே உறங்குவோம்.
எந்த சூழ்நிலையிலும் எங்கள் இருவருக்கும் மாற்று கருத்து எழுந்தது இல்லை.
அதே சமயம், எங்கள் இருவருக்குமே மது அருந்தும் பழக்கமில்லை. இளமைக்காலத்தில் நாங்கள் இருவரும் உடற்பயிற்சியில் அதிகம் ஈடுப்பட்டு வந்ததும் தங்களுடைய நீண்ட ஆயுளுக்கு காரணம்’ என உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.
-http://world.lankasri.com