அண்டார்டிக்காவில் காலநிலை மாற்றத்தால் கொழும்பு நகரை விட 3 மடங்கு அதிக பரப்பளவு கொண்ட பனிப்பாறைகள் உடைந்து விழுந்ததில் சுமார் 1,50,000 பென்குயின் பறவைகள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்டார்டிக்காவில் உள்ள Cape Denison என்ற பகுதியில் வசித்து வந்த சுமார் 1,60,000 பென்குயின் பறவைகள் பற்றி கடந்த 100 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பென்குயின் பறவைகள் பொதுவாக திறந்தவெளி தண்ணீர் பரப்பளவு உள்ள பகுதிகளில் மட்டுமே அதிகமாக வசிக்கும்.
இங்கிருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள கடலுக்கு சென்று மீன்களை வேட்டையாடி உயிர் பிழைக்கும்.
ஆனால், காலநிலை மாற்றம் காரணமாக கடந்த 2010ம் ஆண்டு சுற்றுப்புற தண்ணீர் வற்றியதால் ஒரு மிகப்பெரிய பனிப்பாறை உருவாகியுள்ளது.
இந்த பனிப்பாறையின் பரப்பளவானது கொழும்பு நகரை விட 3 மடங்கு அதிக பரப்பளவு கொண்டதாகும்.
அதாவது, பென்குயின்கள் வசித்த பகுதிக்கும் கடலுக்கும் இடையே திடீரென இந்த பனிப்பாறை உருவாகியுள்ளது.
இதன் விளைவாக, மீனை வேட்டையாட வேண்டிய பென்குயின்கள் இந்த பனிப்பாறை மீது ஏறி சுமார் 60 கி.மீ பயணித்தால் தான் கடலை அடைய முடியும்.
இவ்வாறு இல்லையெனில், இந்த பனிப்பாறையை சுற்றிக்கொண்டு 160 கி.மீ பயணித்தால் கடலை அடைய வேண்டிய சோகமான சூழ்நிலை பென்குயின் பறவைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கு வசித்த 1,60,000 பற்றி ஆய்வு எடுக்க முயன்றபோது, இவற்றில் தற்போது 10,000 பென்குயின்கள் மட்டுமே அந்த பகுதியில் வசிப்பதாகவும், எஞ்சிய 1,50,000 பென்குயின்கள் கடந்த 5 ஆண்டுகளில் உணவு இல்லாமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காலநிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் கூறியபோது, ‘இந்த பனிப்பாறை உடையாவிட்டால், அடுத்த 20 ஆண்டுகளில் இங்குள்ள அனைத்து பென்குயின்களும் உயிரிழந்துவிடும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
-http://world.lankasri.com