யுத்த பூமியில் சிக்கி சின்னாபின்னமாகும் பெண்கள்: நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்

war_women_001போர் நடைபெறும் பகுதியில் எந்த உதவியும், ஆறுதலும் இல்லாமல் வசிக்கும் பெண்கள் தொடர்பாக புகைப்படக்காரர் ஒருவர் எடுத்துள்ள புகைப்படங்கள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்நாட்டு கலவரம், போர் ஆகியவை காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

கற்பழிப்பு, கணவரை இழந்து விதவையாகுதல், ஊனமுற்றல் என்று அவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

இந்நிலையில் புகழ்பெற்ற  புகைப்படக்காரரான நிக் டான்ஞ்ஜெர் என்பவர் இப்பெண்களை சந்துத்து பத்து ஆண்டுகளாக அவர்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் குறும்படங்களை எடுத்துள்ளார்.

அதில் சில பெண்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்த கொடுமைகளை பகிர்ந்துள்ளனர்.

Sierra Leone என்ற பெண்மணி கூறுகையில், நான் Kosovo- வாவில் வசித்த போது, எனது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் என்னிடம் காதலை தெரிவித்தார், அவரை எனக்கு பிடித்துவிட்டதால், நானும் அவருக்கும் சம்மதம் தெரிவித்தேன், இதன் பின்னர் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தபோது, போர் தொடங்கியது, அந்த போர்ச்சூழலில் எனது காதலன் கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நபர் ஒருவரால், துப்பாக்கி முனையில் கற்பழிக்கப்பட்டேன்.

புதருக்குள் பலமுறை கட்டாயப்படுத்தி கற்பழிக்கப்பட்ட நான் ஒரு கட்டத்தில் கர்ப்பமடைந்தேன், அதனை அந்த நபரிடம் தெரிவித்தபோது, அவரோ நான் இந்த குழந்தைக்கு தந்தை கிடையாது என்று கூறிவிட்டார், அதன் பின்னர் வாழ்க்கையை இழந்த நான், கற்பழிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் அமைப்பான humanitarian organisation – ல் எனது வாழ்வை தொடங்கினேன்.

அதன் பிறகு நல்ல மனிதர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, மேலும் ஒரு குழந்தையை பெற்றெடுத்தேன் என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த Mah Bibi என்ற பெண் கூறியதாவது, எனக்கு 4 வயது இருக்கும்போது எனது தந்தையை இழந்துவிட்டேன்.

எனக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர், போர்க்காலத்தில் தீவிரப்பசியால் பாதிக்கப்பட்டேன் என்பது இன்றுவரை எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது, எனது தந்தை, உணவு கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார், ஆனால் இப்போது வரை நான் அவரை பார்க்கவில்லை.

அதன் பிறகு எங்களது பசியாற்றிக்கொள்ள ஆடு, மாடுகளை வைத்து பிழைப்பு நடத்த ஆரம்பித்தோம் என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான்,இஸ்ரேல், பாலஸ்தீனம், உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள 11 பெண்களில் துயரங்களை இவர் பதிவுசெய்துள்ளார்.

தற்போது லண்டனில் நடைபெறும் கண்காட்சியில் இந்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

-http://world.lankasri.com