மிகவும் ஆபத்தான வெடிபொருளை திருடிய ஐ.எஸ்.: அச்சத்தில் உலக நாடுகள்

nuclear_is_001ஈராக்கில் உள்ள அமெரிக்க நிறுவனத்தின் நிலையில் இருந்து மிகவும் ஆபத்தான கதிர்வீச்சு பொருட்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் திருடி சென்றிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஈராக்கின் பஸ்ரா பகுதியில் அமெரிக்க எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான நிலை உள்ளது.

இங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான சோதனைகள் மேற்கொள்வதற்காக கதிர்வீச்சு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் மடிக்கணணி அளவுள்ள கதிர்வீச்சு பொருட்கள் திருடி போயின.

இது தொடர்பாக ஈராக் அரசாங்கம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் அந்த பொருட்களை ஐ.எஸ். அமைப்பினர் திருடிச்சென்றிருக்கலாம் என்றும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அனு அயுத தயாரிப்பதற்கு அவர்கள் அதனை பயன்படுத்தலாம் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் திருடுபோகும் போது எந்த அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், ஒரு வேளை அது ஐ.எஸ். தீவிரவாதிகள் கைக்கு கிடைத்திருந்தால் அணுஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன கதிர்வீச்சு பொருட்களை கண்டுபிடிப்பதற்காக இரவு பகல் பாராமல் ஏராளமான பொலிசார், ராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பணி செய்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலக்கட்டத்திலேயே ரசாயனங்களை பயன்படுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com