’புகை பிடிக்காதீர்கள்…..ஒபாமா போல் செயல்படாதீர்கள்’: இப்படியும் ஒரு விளம்பரமா?

obama_advert_001அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமாவால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கையை விட சிகரெட் பிடிப்பதால் அதிக எண்ணிக்கையில் மக்கள் உயிரிழக்கின்றனர் என ரஷ்ய நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகை பிடிப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை பல நிறுவனங்கள் பல நூதன விளம்பரங்கள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், ரஷ்யாவில் உள்ள பெயர் வெளியிடப்படாத நிறுவனம் ஒன்று புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை பரபரப்பாகவும், அதேசமயம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கும் வகையிலும் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய தலைநகரான மோஸ்கோவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் இந்த விளம்பரம் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் ‘(அமெரிக்க ஜனாதிபதியான)ஒபாமாவால் உயிரிழப்பவர்களை விட புகைப்பிடிப்பதனால் அதிகம் பேர் உயிரிழக்கின்றனர். புகை பிடிக்காதீர்கள்….ஒபாமாவை போல் செயல்படாதீர்கள்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த விளம்பர படத்தை ரஷ்ய அரசியல்வாதியான Dmitry Gudkov என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து, இது உலகளவில் பகிரப்பட்டு வருவதுடன் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது.

அண்மைக்காலங்களில் ரஷ்ய மீது பொருளாதார தடையை ஐ.நா கொண்டு வந்தபோது அதனை அமெரிக்கா ஆதரவு தெரிவித்தை தொடர்ந்து, ஜனாதிபதி ஒபாமா ரஷ்யாவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com