வட கொரிய ஜனாதிபதிக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சதி செய்கிறதா? வெளியான பரபரப்பு தகவல்

kim_yong_001வட கொரியாவின் சர்வாதிகாரியான கிம் யோங் உன்-னை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக தென் கொரிய செய்தி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த யோன்ஹாப் நியூஸ் ஏஜென்சி என்ற செய்தி நிறுவனம் இன்று பரபரப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஐ.நா சபை உள்ளிட்ட பல உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ள வட கொரியாவின் ஜனாதிபதியான கிம், தனது சொந்த ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

வட கொரியா நாடு கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் இவ்வேளையில், அதனை சீர்ப்படுத்தாமல் ராணுவத்திற்கு அதிக அளவில் செலவிட்டு வருவது ராணுவ உயர் அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அவசிய வளர்ச்சிப்பணிகளுக்கு வருமானத்தை பயன்படுத்தாமல், அவசியமற்ற ஆடம்பத்திற்கு ஜனாதிபதி அதிகளவில் செலவிட்டு வருகிறார்.

இதுபோன்ற ஒரு சூழல் தொடர்ந்து நீடித்தால், ராணுவத்திற்குள் பிளவு ஏற்பட்டு, சொந்த உயர் ராணுவ அதிகாரிகளே ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்கும் வாய்ப்புள்ளது என அந்த செய்தி நிறுவனம் அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளது.

ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி அணு ஆயுத சோதனையை நடத்திய காரணத்திற்காக சில தினங்களுக்கு முன் வட கொரியா மீது அமெரிக்கா கூடுதலான பொருளாதார தடைகளை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com