ராக்கா: ஈராக்கில் பெண்கள் ஒழுங்காக உடை அணியவில்லை என்று கூறி உடல் உறுப்பை குத்திக் கிழிக்கும் ஆயுதத்தை பயன்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். ஈராக்கில் உள்ள மொசுல் நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் வசம் வைத்துக் கொண்டு அட்டகாசம் செய்கின்றனர. ஷரியா நீதிமன்றம் என்ற பெயரில் நீதிமன்றத்தை துவங்கி கொடூரமான தண்டனைகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் பெண்களை தண்டிக்க பயன்படுத்தும் ஒரு ஆயுதம் பற்றி தெரிய வந்துள்ளது.
மொசுல் நகரில் பெண்கள் புர்கா அணிந்து, கைகளில் கையுறையும், கால்களில் சாக்ஸும் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும். பெண்கள் ஆண்களின் துணையோடு தான் வெளியே செல்ல வேண்டும் என்று தீவிரவாதிகள் எழுதாத சட்டத்தை வைத்துள்ளனர்.
பெண்கள் யாராவது கைகளில் கையுறை அல்லது காலில் சாக்ஸ் அணியாமல் தோல் தெரியும்படி வெளியே வந்தால் அவர்களை பிடித்து தீவிரவாதிகள் கொடுமைப்படுத்துகிறார்கள்.
பெண்கள் முறையாக ஆடை அணியவில்லை என்று தீவிரவாதிகள் நினைத்தால் அவர்களைப் பிடித்து உடல் பாகத்தை குத்திக் கிழிக்கும் ஒரு ஆயுதத்தை அவர்களின் கை அல்லது கால்களில் மாட்டிவிடுகிறார்கள்.
எனது சகோதரி கடந்த மாதம் வெளியே செல்கையில் கையுறையை மறுந்துவிட்டு சென்றார். உடனே தீவிரவாதிகள் அவரை பிடித்து அவரது கையில் தசையை குத்திக் கிழிக்கும் ஆயுதம் ஒன்றை மாட்டிவிட்டனர். அந்த ஆயுதத்தால் ஏற்பட்ட வலி பிரசவ வலியை விட மோசமானது என்று என் சகோதரி கூறி கதறி அழுதார். இன்னும் அவர் கையில் காயம் உள்ளது என்று மொசுல் நகரில் இருந்து தப்பிய பாத்திமா(22) என்ற பெண் தெரிவித்துள்ளார்.