சிரியாவில் ஐ.எஸ். ஆதிக்கம் மிகுந்த பகுதியில் இளம்பெண்கள் இருவரை கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Deir ez-Zor நகரின் முக்கிய பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.
இப்பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இரண்டு ஆண்களுடன் இந்த இளம் பெண்களை கண்டுபிடித்துள்ளனர்.
ஹஸ்னா (17), மடிஹா (16) ஆகிய இருவரும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்த அந்த பகுதி ஐ.எஸ். ஆதரவாளர்கள்,
ஷாரியா சட்டத்தின்படி அவர்களை கல்லால் அடித்து தண்டனை வழங்க வேண்டும் எனவும் முடிவுக்கு வந்தனர்.
இதனையடுத்து ஹமீதியா மாவட்டத்தில் உள்ள Deir ez-Zor என்ற நகரின் முக்கிய பகுதியில் ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
கூடி நின்ற நூற்றுக்கணக்கான ஆண்கள் அந்த இளம்பெண்கள் இருவரையும் அவர்களின் உயிர் பிரியும் மட்டும் கல்லால் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபச்சார வழக்கினை விசாரித்து அந்த இளம்பெண்கள் மீது கல்லால் அடிக்கும் தண்டனையை வழங்கிய ஷாரியா நீதிமன்றம்,
அந்த பெண்களுடன் பிடிபட்ட ஆண்கள் இருவருக்கும் பொதுவீதியில் வைத்து தலா 50 கசை அடிகளை மட்டுமே தண்டனையாக வழங்கியுள்ளது.
ஷாரியா நீதிமன்றத்தின் இந்த வேறுபட்ட தண்டனை நியதி அப்பகுதி குடியிருப்பு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது மட்டுமல்ல கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-http://world.lankasri.com