ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆயுதங்களை தயாரிக்கும் நாடுகள் எவை? வெளியான பரபரப்பு பட்டியல்

isis_gainstanmerica_001ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வரும் பயங்கர ஆயுதங்களை உலகம் முழுவதும் உள்ள எத்தனை நாடுகள் தயாரித்து வழங்கி வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அமைத்த சிறப்பு குழு ஒன்று கடந்த 20 மாதங்களாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளது.

இந்த ஆய்வில் வெளியான தகவலின் அடிப்படையில், துருக்கி, அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 20 நாடுகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஆயுத தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

அதாவது ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் தானியங்கி துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை உருவாக்க தேவையான ஒவ்வொரு மூலப்பொருட்களும் ஒவ்வொரு நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக துருக்கி நாட்டை சேர்ந்த 13 நிறுவனங்கள் இந்த ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தும் வெடிகுண்டுகள் மற்றும் அதனை வெடிக்க வைக்க உதவும் ’ரிமோட் கண்ட்ரோல் கருவிகள்’ அனைத்தும் 7 இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது.

துருக்கி, அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில், ரோமானியா, ஜப்பான், ரஷ்யா, சீனா, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு உள்ளிட்ட 20 நாடுகள் இந்த ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

-http://world.lankasri.com