நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 25 பேர் பலி: தொடரும் சோகம்

turkey_border_001துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு கடல் வழியாக செல்லும்போது படகு கவிழ்ந்ததில் 25 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு போர் , வறுமை போன்ற காரணங்களுக்காக ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு வருகின்றனர்.

அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோர் துருக்கியில் இருந்து கடல் வழியாக கிரீஸ் நாட்டை அடைந்து பின்னர் தாங்கள் விரும்பிய நாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.

இவ்வாறு கடலில் வரும்போது படகு விபத்தில் சிக்குவது காரணமாக பல அகதிகள் மரணமடைந்து வருகின்றனர்.

எனினும் இத்தகைய ஆபத்தான பயணம் மேற்கொள்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் கிரீஸ் நாட்டுக்கு செல்வதற்காக புறப்பட்ட படகு ஒன்று துருக்கியின் டிடிம் (Didim) நகர் அருகே கடலில் கவிந்தது.

இந்த விபத்தில் 10 குழந்தைகள் உள்ளிட்ட பலர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

முதலில் 18 பேர் இறந்ததாக கூறப்பட்டது. பின்னர் மேலும் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கடலில் சிக்கி தவிப்பர்களை மீட்பதற்காக தேடுதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

201 6 ஆண்டில் இதுவரை 400 க்கும் மேற்பட்டவர்கள் இந்த கடலை சட்டவிரோதமாக கடக்க முயன்று மரணமடைந்துள்ளனர் மற்றும் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com