பொருள் வாங்கிய செய்திக்குத் திருத்தம் வெளியிட்டது ஆசி நாளேடு

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மகள் பொருள் வாங்கிக் குவித்தார் என்று செய்தி வெளியிட்டு ஒரு சலசலப்பை உண்டுபண்ணிய ஆஸ்திரேலிய நாளேடு ஒன்று அச்செய்தி தப்பு என்று நேற்றுத் தெரிவித்தது.

வெஸ்ட் ஆஸ்திரேலியன் என்னும் அந்நாளேடு குறிப்பிட்ட அந்நேரத்தில் பிரதமரின் புதல்வி பெர்த் நகருக்குச் செல்லவே இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அதன் திருத்தங்கள், விளக்கங்களுக்கான பத்தியில் தெரிவித்திருந்தது.

“வெஸ்ட் ஆஸ்திரேலியன், சோகம் பேராளர்கள் சுற்றிப்பார்த்தது பற்றியும் பொருள் வாங்கியது பற்றியும் திங்கள்கிழமை வெளியிட்டிருந்த செய்தியில் பிரதமர் நஜிப்பின் மகள், டேவிட் ஜோன்ஸ் பேரங்காடியில் ஆஸ்திரேலிய டாலர் 60,000-க்குப் பொருள் வாங்கிக் குவித்ததாகக் குறிப்பிட்டிருந்தது.

“அது உண்மை இல்லை என்பதும் அப்போது நஜிப்பின் மகள் பெர்த் நகரில் இல்லை என்பதும் இப்போது தெரியவந்துள்ளது”, என்றது கூறியது.

அந்நாளேட்டில் அதற்கு முன்னர் வெளிவந்த ஒரு செய்தி  “முதல் பெண்மணி”  ஒருவர் (பெயர் குறிப்பிடப்படவில்லை), ரிம450,000 மதிப்புள்ள மேற்கு அஸ்திரேலிய முத்துக்களை வாங்கியதாகத் தெரிவித்திருந்தது.

தற்போது ஹஜ்ஜு யாத்திரை மேற்கொண்டிருக்கும் நஜிப், நேற்று டிவிட்டரில் தல் புதல்வி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவே இல்லை என்றும் தம் மனைவி நகை எதுவும் வாங்கவில்லை என்றும் விளக்கியிருந்தார்.

பெர்த்தில் உள்ள மலேசியப் பேராளர் ஹமிடா அஷாரியும் அந்நாளேட்டுச் செய்தியை மறுத்து நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சுக்குக் கடிதம் எழுதியிருந்தார். 

மலேசியாகினி அந்நாளேட்டைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற முனைந்தபோது அதன் செய்தியாளரைத் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

TAGS: