பெண்களுக்கு தடைவிதித்த நகரம்!

ostersund_women_001பெண்கள் மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட தாக்குதல் அதிகரித்துள்ளதை அடுத்து தனியாக வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டின் Ostersund நகரில் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வெளிநாட்டினரால் அதிக அளவு அச்சுறுத்தலை பெண்கள் சந்தித்து வருவதாக கூறும் நகர நிர்வாகம்,

இரவு வேளைகளில் பெண்கள் தனியாக சாலைகளில் செல்ல வேண்டாம் எஅன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபோன்ற அசாதரணமான சூழலை இதுவரை இந்த நகரில் தாங்கள் சந்தித்தது இல்லை என தெரிவித்துள்ள பொலிசார்,

ஆண், பெண் சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகள் பேணப்படும் ஸ்வீடனில் இதுபோன்ற எச்சரிக்கை விடுப்பது வழக்கத்திற்கு மாறானது என்றனர்.

கடந்த 20-ஆம் திகதி முதல் நகரின் பல பகுதிகளில் பெண்களுக்கு எதிரான தொடர் தாக்குதல் தான் இதுபோன்ற எச்சரிக்கை விடுக்க காரணமாக கூறப்படுகிறது.

குறிப்பிட்ட சம்பவத்தில் தனியாக இருந்த பெண்களை பாலியல் ரீதியாக தாக்கியவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல எனவும் கூறப்படுகிறது.

நகர நிர்வாகம் விடுத்துள்ள எச்சரிக்கையை பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பெண்களும் குழந்தைகளும் வீட்டில் முடங்கியிருக்க வேண்டுமா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

-http://world.lankasri.com