பேஸ்புக்கில் கோளாறு: கண்டுபிடித்த வாலிபருக்கு ரூ.10 லட்சம் பரிசு

fb_hacker_001பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த வாலிபருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் பிளிப்கார்ட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார்.

பேஸ்புக்கின் இந்த குறையை பயன்படுத்தி பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களை திருட வாய்ப்புள்ளது.

இந்த குறையை கண்டுபிடித்த அவர் அதனை பேஸ்புக்கிடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பேஸ்புக்கில் இருந்த அந்த குறை சரி செய்யப்பட்டதோடு, ஆனந்த் பிரகாஷ்க்கு பேஸ்புக் நிறுவனம் 15000 டொலர் பரிசை அறிவித்துள்ளது.

-http://www.newindianews.com