“கல்மனதும் கரையும்” விலங்குகளின் தீவனங்களை சாப்பிடும் குழந்தைகள்

syria_child_001உயிர் வாழ வேண்டும் என்பதற்காகவும், கடும் பசியின் காரணமாகவும் சிரியா குழந்தைகள் விலங்குகளின் தீவனங்களை உண்டு வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் மில்லியன்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள், குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான பேரும் அகதிகளாக மற்ற நாடுகளில் தஞ்சமடைந்தும் உள்ளனர்.

இந்நிலையில் சிரியாவில் நிலவிவரும் கடுமையான உணவு பஞ்சம் காரணமாக குழந்தைகள் ஆடு, மாடுகளின் கால்நடை தீவனத்தை உண்டு உயிர்வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிரியாவில் கடந்த மாதம் முதல் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தாலும், வெகு தொலைவில் வாழும் மக்களுக்கு உணவுகள் கிடைப்பதில்லை.

போதிய மருத்துவ உதவிகள், சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான உணவு இல்லாமல் சுமார் 250,000 குழந்தைகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

சரியான உணவு சாப்பிடாததால் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டும் சக்திகூட இல்லாமல் தாய்மார்கள் வேதனையில் துடிதுடித்துப் போகின்றனர்.

இந்நிலையில் பட்டினியால் குழந்தைகள் மடிவதை தடுப்பதற்காக பெரும்பாலானவர்கள் ஆடு, மாடுகளுக்கு வழங்கும் தீவனங்களை உண்டு வாழ்கின்றனர்.

இதுகுறித்து தந்தை ஒருவர் கூறுகையில், தினமும் தங்கள் குழந்தையின் எடை குறைந்து கொண்டே போவதாகவும், ஏமாற்றி குழந்தைகள் புற்களை உண்ண சொல்வதாகவும் மிகவும் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் போதிய மருத்துவ உதவிகள் இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் மடிந்து கொண்டிருப்பது கல்மனதையும் கரைய வைத்துவிடும்.

-http://world.lankasri.com