உலகில் செலவு அதிகம் பிடிக்கும் நகரம் எது என்பது தொடர்பான பட்டியலை எக்னாமிஸ்ட் இண்டெலிஜெண்ட் யூனிட் வெளியிட்டுள்ளது.
எக்னாமிஸ்ட் இண்டெலிஜெண்ட் யூனிட் ஆண்டுதோரும் உலகளவில் அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான பட்டியலில் 116 புள்ளிகளுடன் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடத்தை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தின் ஜுரிச் நகரம் 114 புள்ளிகளுடன் பெறுகிறது
3-வது இடத்தை ஹாங்காங் நகரமும், 4-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவும் பிடிக்கின்றன.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் 5-வது இடத்தை பெற்றுள்ளது. லண்டன் 6-வது இடத்தையும், நியூயார்க் 7-வது இடத்தையும் பிடிக்கின்றன.
உலகளவில் அதிக செலவு வைக்கும் நகரங்கள் பட்டியலில் பல முறை முதலிடத்தை பிடித்துள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோ, இந்த முறை முதல் 10ல் இடம் பெறவில்லை.
சீனாவின் பொருளாதாரத் தலைநகரான ஷாங்காய் இந்த முறை டோக்கியோவை விட அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் முந்தியுள்ளது.
-http://world.lankasri.com