உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: முதலிடம் பிடித்த நாடு எது?

happiest_country_001உலக நாடுகளில் மிக அதிக மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகவும் அதிகமாய் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை டென்மார்க் நாடு தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இதுவரை முதலிடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து நாட்டை இரண்டாவது இடத்திற்கு தள்ளிக்கொண்டு டென்மார்க் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்து மற்றும் நோர்வே(4), பின்லாந்து(5), கனடா(6), நெதர்லாந்து(7), நியூசிலாந்து(8), அவுஸ்திரேலியா(9), சுவீடன் 10 வது இடத்திலும் உள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியானதில் இருந்து நான்கில் மூன்று முறை டென்மார்க் நாடு முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. இதில் ஒரே ஒரு முறை மட்டும் சுவிஸிடம் முதலிடத்தை பறிகொடுத்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 156 நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆப்கானிஸ்தான் 154 வது இடத்தை பிடித்துள்ளது. சிரியா 156 வது இடம்.

உலகின் வல்லரசு நாடுகளான ஜேர்மனி(16), பிரித்தானியா(23), ஜப்பான்(53), ரஷ்யா(56), சீனா(83) ஆகிய இடங்களிலும் அமெரிக்க 13 வது இடத்திலும் உள்ளது.

அரசியல் பொருளாதார சூழல்கள் காரணமாக கிரேக்கம், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இந்த முறை மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளன.

தனிமனித நலனுக்கு எந்தெந்த நாடுகள் அதிக முக்கியத்துவம் வழங்கியதோ அந்த நாடுகள் மட்டுமே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com