தமிழரின் பெயரை நிராகரித்த ஒபாமா

america_judge_001அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதியான மெர்ரீக் கார்லெண்ட் பெயரை ஜனாதிபதி ஒபாமா பரிந்துரை செய்துள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த அந்தோனின் ஸ்காலியா கடந்த மாதம் உயிரிழந்தார்.

இதையடுத்து புதிய நீதிபதியை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன.

அமெரிக்க இந்தியரான தமிழகத்தை சேர்ந்த சீனிவாசனின் பெயர் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.

அவர் தான் அடுத்த நீதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகின.

அதேவேளையில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி உச்ச நீதிமன்ற நீதிபதியை பரிந்துரைக்கும் வாய்ப்பை அடுத்து வரும் ஜனாதிபதிக்கு ஒபாமா விட்டுக்கொடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியது.

இந்நிலையில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான தனது பரிந்துரையை ஒபாமா தெரிவித்தார்.

அதில் சீனிவாசனுக்கு பதிலாக மூத்த நீதிபதியான மெர்ரீக் கார்லெண்ட் பெயரை அவர் முன்மொழிந்தார்.

இதுகுறித்து ஒபாமா கூறுகையில், கார்லேண்ட் மிகவும் நேர்மையானவர், பண்பு உள்ளவர். பரிந்துரையில் உள்ள மற்ற நீதிபதிகளை விட கார்லேண்ட் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.

எனவே அவரை தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரை தெரிவு செய்வதற்கு எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளார்.

-http://world.lankasri.com