ஓடுபாதையில் விழுந்து வெடித்து சிதறிய விமானம்: பரிதாபமாக பலியான 61 பயணிகள்

paris_prime_001பாரிஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டுவந்த சலா அப்தேஸ்லாம் என்ற முக்கிய குற்றவாளி பெல்ஜிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் தொடர்புடைய நபர் பெல்ஜியத்தில் பதுங்கி இருப்பதாக பாரிஸ் பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த 16ஆம் திகதி பிரசெல்சு நகரில் நடத்திய சோதனையில் குடியிருப்பு ஒன்றில் பதுங்கியிருந்த ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில்தற்போது  பொலிசார் நடத்திய சோதனையில் பாரிஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சலா அப்தேஸ்லாம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை பிரான்ஸ் அமைச்சரான தியோ பிராங்கென் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று ப்ரஸ்ஸல்ஸில் நடந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட வீட்டில் சலாவின் கை ரேகைகள் கிடைத்தன.

எனவே சலாவுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பொலிசார் அதிகரித்தனர். அதன் மூலம் தற்போது அவர் பிடிபட்டுள்ளார்.

அவருடன் பிடிப்பட்டவர்களில் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் மற்றொருவர் மரணமடைந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

ப்ரஸ்ஸல்ஸில் பிறந்த ஃபிரெஞ்சு குடிமகனான சலா அப்தேஸ்லாம் நவம்பர் தாக்குதல்களுக்கு முன்பாகவும் மொலென்பீக் பகுதியில் வசித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சலா கைது செய்யப்பட்டதையடுத்து பாரிஸ் நகரில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக ப்ரஸ்ஸல்ஸில் நடந்துவரும் ஐரோப்பிய யூனியன் -துருக்கி உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பெல்ஜியப் பிரதமர் சார்லஸ் மிசெல் அவசரமாக அந்தக் கூட்டத்திலிருந்து புறப்பட்டச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com