ரஷ்யாவுக்கு செல்லும் ஜான் கெர்ரி: அழிக்கப்படுமா ஐ.எஸ் தீவிரவாதம்?

putin_keery_001அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ரஷ்யாவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயணத்தின் போது உக்ரைன் விவகாரம், மின்ஸ்க் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சிரியாவில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர எடுக்க வேண்டிய முடிவுகள், ஐ.எஸ். தீவிரவாதத்தை சிரியாவில் இருந்து முற்றிலுமாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

ஐ.நா. தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தை துவங்கவுள்ள நிலையில், கடந்த 15 ஆம் திகதி முதல் சிரியாவில் இருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப்பெற ஆரம்பித்துள்ளது.
தொடர்ந்து 6 ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டுப்போர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com