இன்று சர்வதேச வானிலை தினம்

wetherவெப்பம், காற்றின் வேகம், திசை, மாறிவரும் பருவமழையின் அளவுகள் பற்றிய தகவல்களே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகள். இவற்றை மெல்ல மெல்ல நாம் இழந்து வருகிறோம் என்றே கூறவேண்டும்.

இந்நிலை தொடர்ந்தால், ‘மூன்றாம் உலகப்போர்’ ஏற்பட வானிலை மாற்றம் ஒருஏதுவாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மார்ச் 23இல் உலக வானிலை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகளின் அங்கமான வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 23ஆம் திகதி வானிலை தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

வெப்ப அலை எனும் தொனிப் பொருளில் 2016ஆம் ஆண்டிற்கான வானிலை தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

2015ஆம் ஆண்டில் பெரிதும் பதிவாகிய வெப்ப நிலை தாக்கம் தொடர்பில் இந்த வருட வானிலை தினத்தில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

உலக வரலாற்றில் கடந்த வருடமே வெப்ப நிலை அதிகரித்த வருடமாக பதிவாகியமையும் குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com