முஸ்லீம் அகதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ்

pope234ரோம்: புனித வெள்ளி அன்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என 12 அகதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்டுள்ளார்.

ஏசு கிறிஸ்து உயிர் துறக்கும் முன்பு தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். அவர்களுக்கு சேவை செய்யும் வகையில் அவர் அவ்வாறு செய்தார். அதை நினைவுகூரும் வகையில் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது.

புனித வெள்ளி அன்று போப் ஆண்டவர் 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிடுவது வழக்கம். அதன்படி இத்தாலியின் ரோம் அருகே உள்ள அகதிகள் முகாமிற்கு சென்ற போப் பிரான்சிஸ் அங்கிருந்த 4 பெண்கள் உள்பட 12 பேரின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். அவர் 3 முஸ்லீம்கள், ஒரு இந்து அகதிகளின் பாதங்களையும் கழுவி முத்தமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அவர் கூறுகையில், முஸ்லீம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒன்று தான். நாம் அனைவரும் சகோதரர்கள். இறைவனின் குழந்தைகள். நாம் அனைவரும் ஒன்றாக அமைதியாக வாழ விரும்புகிறோம் என்றார்.

tamil.oneindia.com