வடகொரியா குடிமக்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி: அதிரடி எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி

kim_jonh_001வட கொரியா நாட்டை இரண்டாவது முறையாக வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட உள்ளதால் குடிமக்கள் அனைவரும் அதனை எதிர்க்கொள்ள தயாராக இருக்கும்படி அந்நாட்டு ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 1994 முதல் 1998 ஆண்டுக்கு இடைப்பட்ட 4 ஆண்டுகளும் வடகொரிய குடிமக்களின் ‘இருண்ட காலம்’ என்றால் அது மிகையல்ல.

இந்த 4 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உணவின்றி பெரிதும் துன்பமுற்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் எலிகளையும், இறந்து கிடந்த மனித சடலங்களையும் உணவாக சாப்பிட்டது உலகையே உலுக்கியது.

இதுமட்டுமில்லாமல், உணவு இல்லாமல் தவித்த மக்கள் மரங்களின் வேர்களை வெட்டி உணவாக சாப்பிட்டனர். இந்த பஞ்சத்தில் சிக்கி சுமார் 30 லட்சத்துக்கும் மேலான குடிமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த மரண ஓலங்களின் சத்தம் முழுமையாக நீங்காத நிலையில், தற்போது அந்நாட்டு சர்வாதிகாரியான கிம் யோங்-அன் ஒரு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளதாக அரசாங்க பத்திரிகையான Rodong Sinmun கடந்த திங்கள் அன்று ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில், ‘குடிமக்களே, வடகொரியா நாட்டை தாக்க மீண்டும் ஒரு கடுமையான பஞ்சம் ஏற்பட போகிறது.

மரங்களின் வேர்களை மீண்டும் சாப்பிடுவதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பஞ்சத்தை எதிர்கொள்ள குடிமக்கள் தயாராக இருக்கும்படி’ அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாமல், ‘இந்த பஞ்சத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் குறை கூறக் கூடாது. நமது உயிரை கொடுத்தாவது அரசாங்கத்தின் பெயரை காப்பாற்ற வேண்டும்’ என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியாவதற்கு முன்னதாகவே, தலைநகரான பியோங்யாங்கில் வசிக்கும் குடிமக்கள் அரசாங்கத்திற்கு மாதம் ஒருமுறை ஒரு கிலோ அரசி கொடுத்து சேமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதாகவும் செய்திகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை, ஏவுகணையை செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதன் விளைவாகவே இந்த பஞ்சம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com