இரட்டை கோபுர தாக்குதலில் பலியானவர்களை விட அதிகமானவர்களை கொல்லுவோம் என அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.
மேலும் அண்டை நாடான தென் கொரியாவுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் எப்போது வேண்டுமானால் போர் ஏற்படலாம் என உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.
இதற்கிடையே தென் கொரியாவுக்கு ஆதரவாகவும் தமக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா எச்சரித்திருந்தது.
தற்போது அமெரிக்காவுக்கு எதிராக மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் அரசாங்க ஊடகமான DPRK வெளியிட்டுள்ள செய்தியில், 15 வருடங்களுக்கு முன்னர் 3 பேர் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரம் பேர் பலியாகினர்.
இது அமெரிக்காவுக்கு மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது. ஆனால் மேற்கொள்ளும் இறுதி யுத்தத்தின் வெளிப்பாடாக வரலாற்றில் இருந்தே அமெரிக்கா துடைத்தெடுக்கப்படும்.
இந்த தாக்குதல் தொடர்பாக கவலைப்படுவதற்கு கூட அவர்களுக்கு நேரம் இல்லாமல் செய்துவிடுவோம்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனை வடகொரியாவின் ஏவுகணை மற்றும் ஆயுதங்கள் தரை வழியாகவும், வான்வழியாகவும், கடல் வழியாகவும் குறி வைத்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.
வடகொரியாவில் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்காவுக்கு வட கொரியா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-http://world.lankasri.com
பதில் தாக்குதல் நாகாசாக்கியை விட நாசகாரமாக இருக்கும் என்பது இந்த அறியாப் பிள்ளைக்குப் புரியவில்லை.
உலக சட்டாம்பிள்ளைக்கே மிரட்டல். அமெரிக்காவின் எதிர்வினையை பொறுத்திருந்து பார்ப்போம்.
இவனைப்போன்ற புத்தி கெட்ட அதிகார வெறி கொண்ட தலைகள் இவ்வுலகில் ஏராளம்–புட்டினையும் சேர்த்துதான். எத்தனையோ பேர் பட்டினியால் இறந்து போகையில் என்ன பெருமை வேண்டி கிடக்கிறது? எங்கு பார்த்தாலும் அதிகார வெறி தற்பெருமை– குறை கூரலை ஏற்காத மனநிலை. பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஈன ஜென்மங்கள். மனிதாபிமானம் சிறிதும் இல்லாத ஜென்மம்.
சண்டை நடக்கட்டும்
அப்போதுதான்
வட கொரியா இல்லாமல் போகும்
ஒரு கொரியா தான் இருக்கும், ஜெர்மனி போல்