தென் கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு வட கொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் அவ்வப்போது இதனை பரிசோதித்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனை தட்டிக்கேட்கும் நாடுகளுக்கு எதிராக எச்சரிக்கையும் விடுத்து வருகிறது.
சமீபத்தில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த வட கொரியா தற்போது தென் கொரியாவுக்கு எதிரான எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் அரசாங்கத்துக்கு ஆதரவான DPRK ஊடகத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், வடகொரிய வீரர்கள் தென் கொரியாவின் முக்கிய கட்டிடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் தென் கொரிய ஜனாதிபதியின் அலுவலகமான புளூ ஹவுஸ் வெடித்து சிதறுவது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது.
தென் கொரியாவை அழித்து அனைத்தையும் சாம்பலாக்கி விடுவோம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து எச்சரிக்கை வீடியோ வெளியிட்டு வரும் வடகொரியா சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகர் மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் போருக்கு வட கொரியா தயாராகி வருவது அப்பட்டமாக தெரியவந்துள்ளது.
-http://world.lankasri.com
போகிற போக்கைப் பார்த்தால் ஒரு பெரும் யுத்தத்திற்கு பிள்ளையார் சுழி போடுவது மாதிரி இருக்கு. இதுபோன்ற சில மூர்க்கர்களின் ஆதிக்க வெறியால் ஏற்படும் போரினால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே.
வட கொரியா போருக்குத் தயாராகவில்லை. எதிர்வரக்கூடிய பஞ்சத்திற்கு எப்படி தென் கொரியாவை பயமுறுத்தி தானியங்களையும், மானியங்களையும் பெற முடியும் என்பதற்கு ஒத்திகை பார்க்கிறது. இதுவரை செய்து வந்த மாயா ஜாலங்களால் பருப்பு வேகவில்லை என்று அறிந்தவுடன் மலையைப் பார்த்து குரைக்க ஆரம்பித்து விட்டது.