அதிகரித்து வரும் காற்று மாசு: நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆர்வலர்கள்

londonபிரித்தானியா தலைநகர் லண்டனில் காற்று மாசு வேகமாக அதிகரித்து வருவது தொடர்பாக நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களை பொலிசார் கைது செய்தனர்.

பிரித்தானியா தலைவர் லண்டனில் காற்று மாசு வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கிரீன்பீஸ் அமைப்பினர் நூதன முயற்சியில் இறங்கினர்.

லண்டன் நகரில் உள்ள லார்ட் நெல்சன், சர் வின்ஸ்டன்சர்ச்சில், விக்டோரியா மகாராணி ஆகியோரது சிலைகளில் முகமூடி அணுவித்தனர். அதிகாலையிலேயே சிலைகளுக்கு முகமூடி அணிவிக்கும் பணியை தொடங்கிய அவர்கள் சுமார் 17 சிலைகளுக்கு முகமூடி அணிவித்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்த பொலிசார் 8 பேரை கைது செய்தனர்.

லண்டன் நகரை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும். இல்லையென்றால் லண்டனில் மட்டும் 10 ஆயிரம் பேரும், பிரித்தானியா முழுவதும் 40 ஆயிரம் பேரும் ஆண்டுதோறும் இறக்க நேரிடும் என்றும் கிரீன்பீஸ் அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். புகழ் பெற்றவர்களின் சிலைகளில் முகமூடி அணிவித்த அவர்களது செயல்களுக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு மற்றும் ஆதரவு பெருகியுள்ளது.

http://news.lankasri.com