நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை: மீண்டும் மிரட்டும் வடகொரியா!

north_south_001நீர் மூழ்கி கப்பலில் இருந்துகண்டம் விட்டு கண்டம் பாயும்ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இதுகுறித்துவடகொரிய அரசால் நடத்தப்படும் கேசிஎன்ஏசெய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனையை அதிபர்கிம் நேரில் பார்வையிட்டு உறுதிசெய்தார்.

மேலும்தென்கொரியாவும் அமெரிக்காவும் தங்களுக்கு எதிராக செயல்பட்டால், அவற்றைத்தாக்கும் திறன் வடகொரியாவுக்கு இருக்கிறதுஎன்றும் கிம் தெரிவித்தார் எனகூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,ஜப்பான் கடல் பகுதியிலிருந்தபடி ஏவப்பட்ட அந்த ஏவுகணை வெறும்30 கி.மீ. தூரம் மட்டுமேபறந்து சென்றதால், அது தோல்வியடைந்திருக்கும் என்று தென்கொரியாபாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை சோதனைக்கு, அமெரிக்காவும், தென் கொரியாவும் கண்டனம் தெரிவித்துள்ளநிலையில், தென் கொரியாவுடன், அமெரிக்கா நடத்தி வரும் கூட்டு போர் பயிற்சியை நிறுத்தினால், அணு ஆயுத சோதனையை கைவிட நாங்களும் தயார் என, வடகொரியா அதிபர் தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com