ஐரோப்பிய நாட்டை சேர்ந்த விமானத்தை சுட்டு வீழ்த்த ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதை ஊடகவியலாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அந்த ஊடகவியலாளரின் உண்மையான பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஆனால், தன்னை ஒரு இஸ்லாமியர் என அறிமுகப்படுத்திக் கொண்டு Said Ramzi என்ற பெயரில் பேஸ்புக் மூலமாக ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பழகியுள்ளார்.
கடந்த 6 மாதங்களாக பழகிய ஊடகவியலாளரை ‘தீவிரவாதி’ என ஐ.எஸ் தீவிரவாதிகள் நம்பியுள்ளனர்.
இதன் பிறகு ஊடகவியலாளர் நடத்திய அதிரடி ரகசிய விசாரணையில் தான் பல உண்மைகள் வெளியாகியுள்ளன.
தீவிரவாதி குழுக்களுடன் ஊடகவியலாளர் நடத்திய உரையாடலில் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றை அவர்கள் சுட்டு வீழ்த்த சதி திட்டம் தீட்டியுள்ளதை தீவிரவாதிகளே ஊடகவியளாருடன் விளக்கியுள்ளனர்.
அதாவது, வானில் பறக்கும் விமானத்தை தரையில் இருந்து சிறிய ராக்கெட் மூலம் சுட்டு வீழ்த்த முடியும் என்றும், இதனை ஐரோப்பிய நாடுகள் அடுத்த 100 ஆண்டுகளுக்கு மறக்க முடியாத அழிவை ஏற்படுத்துவோம் என கூறியுள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், விமானத்தை எப்படி சுட்டு வீழ்த்துவோம் என்றும் தீவிரவாதிகள் ஊடகவியாளரிடம் தெரிவித்துள்ளனர்.
தகவல்களை சேகரித்த ஊடகவியலாளர் அதனை உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்த ஐ.எஸ் தீவிரவாத குழு இருந்த இடத்தை பொலிசார் அதிரடியாக சோதனை செய்துள்ளனர்.
அப்போது, சிலர் கைது செய்யப்பட்டாலும், சில தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியுள்ளனர். தப்பிய தீவிரவாதிகளில் ஒருவன் ஊடகவியாளருக்கு ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளான்.
அதில் ‘உன்னை கொல்லாமல் விடமாட்டோம்’ என மிரட்டியுள்ளான். ஊடகவியலாளர் மூலம் அம்பலாகியுள்ள இந்த தகவலை தொடர்ந்து, ஐரோப்பிய புலனாய்வு துறை அதிகாரிகள் கூட்டாக இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-http://news.lankasri.com