வாக்குகள் தங்களின் உரிமைகள். எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அரிய செல்வங்களான அவற்றை வாக்காளர்கள் பணத்துக்காக விற்றுவிடக் கூடாது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
வாக்கு என்ற உரிமையைக் கொண்டு மக்கள் தங்கள் பகுதிகளுக்கு மேம்பாட்டைக் கொண்டு வரக்கூடிய சரியான வேட்பாளர்களைத் தீர்மானிக்க முடியும். அவற்றைத் தவறான பேர்வழிகளிடம் ‘விற்று’ ஏமாந்து போகக் கூடாது என்றாரவர்.
“அவர்கள்(வாக்காளர்கள்) தத்தம் பகுதிகளின் நீண்டகால மேம்பாட்டை எண்ணிப் பார்க்க வேண்டும் குறுகிய-கால ஆதாயத்துக்காக வாக்குகளை விற்கக் கூடாது”. ஸ்ரீஅமானுக்கு 40கிமீ தொலைவில் உண்டோப்பில் உள்ள ஒரு இபான் கிராமத்தில் பேசியபோது நஜிப் இவ்வாறு கூறினார்.
என்னா செய்யிறது? இதையெல்லாம் நீங்க பேசி நாங்க கேட்க வேண்டியிருக்கு!
இதோ பாருடா யாரு பேசறது. பயம் பேசுதோ
நீங்கள் சொல்வதிலிருந்தே தெரிகின்றது பணத்துக்காக வாக்கு.
உத்தம புத்திரனின் வேத வாக்கு கடைபிடியுங்கள் பயன் அடைவீர்கள் $$$$$$$$$$$$$$$$
ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைபட்டதாம்!!!!!!! செம்ம காமடி!!!!!!!!!!!!!!
தலைவரே!அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்!!!