முக்ரிஸ் மகாதிர், தம் தந்தை டாக்டர் மகாதிர் முகம்மட் தன்னை அரசியலில் முன்னிறுத்த நினைத்திருந்தால் அவர் பிரதமராக இருந்தபோதே அதற்கு உதவியிருக்கலாம் பணி ஓய்வு பெற்று 13 ஆண்டுகள்வரை காத்திருக்க வேண்டியதில்லை என்றார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பத்திரிகைச் செயலாளர் தெங்கு அஹமட் சரிபுடின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு முக்ரிஸ் இவ்வாறு பதிலளித்தார்.
மகாதிர் தம் புதல்வர் முக்ரிசைப் பிரதமராக்க முயல்கிறார் என்று தெங்கு சரிபுடின் குற்றஞ்சாட்டி இருந்தார். அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று முக்ரிஸ் குறிப்பிட்டார்.
தெங்கு சரிபுடினுக்கு எதிராக முக்ரிஸ் அவதூறு வழக்கும் தொடர்ந்துள்ளார்.
“மகாதிர் என் அரசியல் வாழ்க்கையில் உதவ விரும்பி இருந்தால் அவர் 22 ஆண்டுகளாக பிரதமராகவும் கட்சித் தலைவருமாக இருந்தபோது செய்திருக்க முடியுமே”, என்று முக்ரிஸ் கூறினார்.
மக்களை முட்டாளாக முடியும் மேலே உள்ளவனை இல்ல…சொல்லு உன் அப்பன் கிட்டே!
இப்ப மட்டும் என்ன எல்லாம் உனக்காக தானே மனுஷன் துப்பு பட்டு தொங்கி கிடக்கிறார் .எல்லாம் $$$$$$$$$$$$
உங்களுடைய தகப்பனை யாரும் அவ்வளவு எளிதில் நம்ப நாங்க ஒன்னும் ஏமாந்த சோணகிரி இல்லை அவர் பண்ண பஞ்சமாபாதகத்தை என்னவென்று சொல்வது!போதுமடா சாமி!!!!!