அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு பிரிவு (எப்பிஐ), பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மாற்றான் பிள்ளை ரிசா அசிஸ் இரண்டு சொகுசு வீடுகள் வாங்கியது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. 1எம்டிபி விசாரணை தொடர்பில் ரிசா விசாரிக்கப்படுவதாக த வால் ஸ்திரிட் ஜர்னல் அறிவித்தது.
நியுயோர்க்கிலும் லோஸ் எஞ்சலிசிலுமிள்ள அச்சொத்துகளை வாங்குவதற்கு குறைந்தது யுஎஸ்50 மில்லியன் 1எம்டிபி- இலிருந்து வந்திருக்கலாம் என விசாரணையாளர்கள் நம்புவதாக அந்த ஏடு கூறியது.
“சொத்துகள் வாங்குவதற்குப் பணம் வந்த விதம் குறித்து எபிஐ ஆராய்வதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன”, என WSJ கூறிற்று.
ஹாலிவூட் படத் தயாரிப்பாளரான ரிசா 2012-இல் நியுயோர்க் லாரல் பார்க்கில் உள்ள ஆடம்பர அடுக்ககத்தில் யுஎஸ்33.5 மில்லியனுக்கு ஏழு-அறை கொண்ட சொகுசு வீடு ஒன்றை வாங்கினார்.
2010-இல் லோஸ் ஏஞ்செல்ஸ் பீவர்லி ஹில்சில் யுஎஸ்17.5 மில்லியனுக்கு ஒரு மாளிகை வாங்கினார். அதில் தங்க பிரமிட் கோபுரத்துடன் 120′ நீள நீச்சல் குளம் ஒன்றும் இருக்கிறதாம்.
கோவிந்தா! கோவிந்தா!
அடேங் அப்பா இப்படியுமா
அங்கேயுமா… திருந்த மாட்டிங்க்கடா.. திருந்தவே மாட்டிங்க
ந..ப் தன் மற்றான் பிள்ளையை சொர்கத்திற்கே அனுப்பிவிட்டார். விரைவில் இவரும் அங்கு சென்று விடுவார்.மாற்றாம் பிள்ளைக்கே இந்த வாழ்வு என்றால் தன் குடும்ப வாழ்வு…………………..?????
மலேசியா மக்களே மூளை ஹிருத யோசிக்கவும்
ங்கொயால…………. மவனே சங்கு தான்