நஜிப்பை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு அடுத்த பொதுத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நஜிப்பின் நாடாளுமன்ற தொகுதியான பெக்கான் வாக்காளர்களை முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.
14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப் ரசாக் பிரதமர் பதவியில் தொடராமல் இருப்பதை இது உறுதி செய்யும் என்று நேற்றிரவு நெகிரி செம்பிலான், நீலாயில் “மலேசியாவை காப்போம்” என்ற நிகழ்ச்சியில் மகாதீர் கூறினார்.
சொந்த வம்சாவளியையே சுயநலத்திற்காக மட்டந்தட்டி ஒன்றுமில்லாமல் ஆக்கிய உமக்கே எங்கள் இனம் ஓட்டுப் போட்டு அத்தனைக்காலம் ஆட்சிபீடத்தில் அமர வைத்து அழகு பார்த்ததை மறந்துபோய்விட்டீர் போலிருக்கே !! அதெல்லாம் கொடுக்கப்படும் பிரிம்(BRIM) தொகையை வைத்துத்தான் முடிவு செய்யப்படும், உம் பேச்சைக் கேட்டு அல்ல. அந்தளவுக்கு கல்வி, பொருளாதாரம், அரசியல் என அனைத்திலும் இந்த இனத்தை கீழ் நிலைக்குக் கொன்டுவந்து எங்கள் தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய நீர் இதையெல்லாம் பேசி, நாங்கள் கேட்கவேண்டும் என்று இருப்பதுதான் இவ்வளவு வருத்ததிலும் பெரிய நகைச்சுவை..!! 🙁
பள்ளிப்பாடப் புத்தகங்களில் அவரை அசல் பூமிபுத்ரா என்று மாற்றி அமைத்து விட்டார்கள்! வெகு விரைவில் அவர் ஒரு இந்திய காக்காயின் மகன் என்று சொல்லி பாடப்புத்தகத்தையே மாற்றி விடுவார்கள்! அதனையும் எதிர்பார்க்கலாம்!
மகாதிர்மாமாக்!நீர் யாரையா நஜிபுக்கு ஓட்டு போடகூடாதுன்னு கூற! எங்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று!உங்கள் பேச்சை கேட்டு தானே எங்கள் சமுதாயத்தை குட்டி சுவராகியது போதாதா!கொஞ்சமா நஞ்சமா!பாவி உமக்கு மன்னிப்பே கிடையாது ஒரு சமுதாயத்துக்கு செய்த துரோகம் உலக வரலாற்றில் மறக்கபடாது!இனியும் நீர் சொல்லி நாங்கள் கேட்க என்ன முட்டாளா!