கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சிறை!

saudiசவுதி அரேபியாவில் அனுமதியின்றி கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சவுக்கடி அல்லது சிறை என்ற புதிய சட்டம் அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனிமனித சுதந்திரத்தை இது பாதிப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தால் அது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என சட்ட நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள இந்த சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை கிளம்பியுள்ளது.

ட்விட்டர் பக்கத்தில் மட்டும் 35,000 கருத்துகள் இது தொடர்பாக பதிவேற்றப்பட்டுள்ளது. கணவரின் கைப்பேசியை சோதனையிட்டாலே மனைவிக்கு சவுக்கடியா என கேட்டு இளைஞர்கள் கொந்தளித்துள்ளனர்.

வாழ்க்கை இன்னலின்றி இருக்க வேண்டும் என்றால் கணவன் தனது தனிப்பட்டவாழ்க்கை முறையை மனைவியுடன் பகிர்ந்துகொள்வதே சரி என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்னொருவர் சவுதியில் கடைபிடித்துவரும் இன்னொரு முக்கிய பிரச்னையை சுட்டிக்காட்டியுள்ளார். மனைவியரை அடித்து துன்புறுத்தும் கணவர்களுக்கு என்ன தண்டனை? மனைவிக்கு போதிய உரிமைகளை வழங்காத கணவர்களுக்கு இந்த சமூகம் என்ன தண்டனை வழங்கவிருக்கிறது? சட்டம் இதுபோன்ற காரணிகளை களைய முன்வர வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் உள்ள குடிமக்களின் சமூக நலன் கருதியே இதுபோன்ற சட்டங்களை அமல்படுத்துவதாக முதிர்ந்த சட்ட நிபுணரான தெம்யத் தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com