மலேசியாவைப் பாதுகாப்போம் இயக்கம் அதன் குடிமக்கள் பிரகடனத்துக்கு ஆதரவாக ஒரு மில்லியன் கையெழுத்துகளைப் பெற்றிருக்கலாம் ஆனால், அதனால் ஆகப் போவது எதுவுமில்லை என்கிறார் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி.
“ஒரு மில்லியன் கையெழுத்துகளால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் எதுவும் கிடையாது”, என உள்துறை அமைச்சின் குடும்பத் தின நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஹமிடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மலேசியாவைப் பாதுகாப்போம் இயக்கம், தங்கள் குடிமக்கள் பிரகடனத்துக்கு ஆதரவாக 1.27மில்லியன் பேர் கையெழுத்திட்டிருப்பதாகவும் விரைவில் அதை மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் ஒப்படைக்கப்போவதாகவும் நேற்று கூறியிருந்தது.
ஹா ஹா ஹா நீங்க எதை பற்றிடா கவலைபட்டீங்க? உண்மைக்கும் நியாத்திர்க்கும் மதிப்பு கொடுக்கும் ஜென்மங்களாக இருந்தால் உரைக்கும்– அதிகாரத்திர்க்காக உன்னைப்போன்ற ஈன ஜென்மங்கள் எதுவும் செய்வீங்க என்று சிந்திக்கும் மனசாட்சி உள்ள யாவருக்கும் தெரியுமே. என்ன செய்வது? இப்போதெல்லாம் ஈன ஜென்மங்களுக்கு தானே மரியாதை.
ங்கொயால……. நச்சின்னே சொன்னிங்க பாஸ்
வெட்கமில்லை, மானமில்லை, ஈனமில்லையே!