இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் தலைமை ஏற்றிருந்த அம்னோவை அழிக்கும் நோக்கத்தை மகாதீர் கொண்டிருக்கிறார் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது என்று அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கூறுகிறார்.
முன்னதாக, மகாதீர் பிரதமர் நஜிப்பின் மீது மட்டுமே தமது தாக்குதலை மேற்கொண்டிருந்தார் என்பதை தெங்கு சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் கோலகங்சார் மற்றும் சுங்கை புசார் இடைத் தேர்தல்கள் சம்பந்தமாக சமீபத்தில் மகாதீர் கூறியிருக்கும் கருத்துகளிலிருந்து அவர் எதிரணியுடன் இருக்கிறார் என்று தெங்கு மன்சோர் குறிப்பிட்டார்.
“அவர் (மகாதீர்) இடைத் தேர்தல்களில் பிஎன்னுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுகிறார்.
“இது அவர் எதிர்க்கட்சியுடன் இருக்கிறார் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது. அவர் நமது கட்சியைக் கொல்லப் பார்க்கிறார்”, என்று தெங்கு அட்னான் கூறினார்.
காண்டாமிருகம் கத்துது.