பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், சிறையில் உள்ள தம் கணவர் அன்வார் இப்ராகிம் எழுதிய எட்டுப் பக்கக் கடிதம் குறித்துக் கருத்துரைக்க மறுத்தார்.
இன்று காலை, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் பெர்மாத்தாங் பாவ் எம்பி-ஆன அவரைச் சுழ்ந்துகொண்டு கடிதம் பற்றி வினவினர்.
“அது கட்சியின் உள்விவகாரம்”, என்று சுருக்கமாக பதிலளித்தார் வான் அசிசா.
அப்படியானால் பிகேஆர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிருடன் ஒத்துழைப்பதை நிறுத்திக் கொள்ளுமா என்று வினவியதற்கு, “அப்படி எதுவும் அவர் (அன்வார்) சொல்லவில்லையே, சரிதானே?”, என்றார்.
கடிதம் எச்சரிக்கை விடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டியதற்கு, “கவனமாக இருக்கச் சொல்கிறது. அவ்வளவுதான்”, என்று பதிலளித்தார்.
அய்யய்யோ! நன்னா யோசிச்சி பதில் சொல்லுங்க அக்கா! அல்தாந்துயா நஜிப்தான் எங்க மகாதிமிரை கை கழுவி விட்டார், நீங்களும் எங்க மாமாவை ஒதுக்கிட்டா இந்த தள்ளாத வயதிலே, அவர் எங்கே போவார்?