டாக்டர் மகாதிர் முகம்மட் சுங்கை புசார், கோலா கங்சார் இடைத் தேர்தல்களில் போட்டியிட விரும்புவதாக மலாக்கா முதலைமைச்சர் (சிஎம்) இட்ரிஸ் ஹருன் கூறினார்.
முன்னாள் பிரதமர் இடைத் தேர்தல்களில் காட்டுகின்ற ஆர்வத்தையும் பிஎன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் அடிப்படையாக வைத்து இட்ரிஸ் இம்முடிவுக்கு வந்துள்ளார்.
“ஒரு வேட்பாளராவதில் அவர் மிகவும் ஆர்வம் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
“அவர் ‘பிஎன்னைத் தோற்கடிக்கக் கடுமையாக பாடுபடுவோம்’ என்று கூறியது அவர் வேட்பாளராக விருப்பம் கொண்டிருக்கிறார் என்பதைக் காண்பிக்கிறது”, என இட்ரிஸ் தெரிவித்ததாக சினார் ஹரியான் கூறியது.
அம்னோவும், பாரிசானும் காப்பாற்றப் பட வேண்டுமானால், அல்தாந்துயா நஜிப் பதவியிலிருந்து விரட்டப்பட வேண்டும், என்று கூறி நாடு பூராவும் டமாரம் அடித்து வரும் மகாதிமிர் , அம்னோவுக்கு எதிராக கோலலங்க்சாரிலோ, சுங்கை பெசாரிலோ அம்னோவுக்கு எதிராக நிற்பார் என இந்த மலாக்கா முதல்வர் கூறுவது அறைவேக்கட்டுத்தனமான அறிக்கை. அம்னோ காப்பாற்றப்பட வேண்டும் எனக் கூறும் மகாதிமிர், அம்னோவுக்கு எதிராக களத்தில் குதிப்பார் எனக் கூறுவது அருமையான பைத்திரத்தனம்.அரசியல்வாதிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மக்களை குழப்ப புறப்பட்டு விட்டார்கள். மக்களே ஜாக்கிரதை!