அன்வாரைச் சந்திக்க சிறைச்சாலை செல்லும்போது அவரைத் தொட்டுப் பேசுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரி அன்வார் குடும்பத்தார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
“கடந்த ஹரி ராயாவின்போது அவருடன் கைகுலுக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் இப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டியதாயிற்று”, என அன்வாரின் துணையாரும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உங்களது கோரிக்கை நிறைவேறாது. அன்வார் சாதாராண குற்றமா புரிந்துள்ளார்? தனது அமைச்சின் அதிகாரிகளை பயன்படுத்தி, பல ‘அல்தாந்துயாக்களை’ வெடி வைத்து தகர்த்துள்ளார். பல நூறு கோடி தனது பைக்குள் போட்டுக் கொண்டு, அகப்பட்டவுடன், வெளிநாட்டுக்காரன் கொடுத்த ‘அன்பளிப்பு’ என சப்பைக் கட்டு கட்டுகிறார். எவரையும் சந்திக்கும் அருகதை இவருக்கு இல்லை.
இருக்குறவன் பெரிய திருடன். அதுலாம் உங்க கண்ணுக்கு தெரியாது. சொந்த குடம்பதாறு பாக்கணும்னு தானே கேகுரங்கள். அதுகூட இப்படியா. கடவுளே.