தாமஸ் கிண்ண காலிறுதிப் போட்டியில் மலேசியா

cupமலேசிய  பெட்மிண்டன்  குழு  தாமஸ்  கிண்ண  காலிறுதிப்  போட்டிக்குத்  தகுதி  பெற்றுள்ளது.

சீனாவின்  குன்ஷானில்  நடைபெறும்  தாமஸ்  கிண்ணப்  போட்டியில்  சி  பிரிவில்   தென்  கொரியாவை  3-2  என்ற  ஆட்டக்கணக்கில்  வெற்றி  கொண்ட  மலேசியா  நாளை  நடைபெறும்  காலிறுதிப்  போட்டிக்குத்  தகுதி  பெற்றது. இப்போட்டியில்  அரை- இறுதி  ஆட்டத்தை  எட்டுவதுதான்  மலேசியாவின்  இலக்கு.  இருக்கும்  நிலவரத்தைப்  பார்க்கும்போது  அது  நிறைவேறும்  வாய்ப்பு  உள்ளதாகவே  தெரிகிறது..

காலிறுதி  ஆட்டத்துக்கு  சீனா,  ஜப்பான்(ஏ  பிரிவு),   இந்தோனேசியா,  தாய்லாந்து (பி  பிரிவு),  தைவான்,  டென்மார்க் (டி  பிரிவு,  சி  பிரிவு  இரண்டாம்நிலை  வெற்றியாளர்  என்ற  முறையில்  தென்  கொரியாவும்  தகுதி  பெற்றுள்ளன.