பாஸ்: இடைத் தேர்தல்கள் குறித்து அஸ்மினைச் சந்திக்கவில்லை

talkஎதிர்வரும்  இடைத்  தேர்தல்கள்  குறித்து   பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலியுடன்  பேச்சு  நடத்தியதாகக்  கூறப்படுவதை  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  மறுத்தார்.

இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  சந்தித்து  வினவியபோது,  “அப்படி  எதுவும் இல்லை”,  என  மாராங்  எம்பி  தெரிவித்தார்.

இடைத்  தேர்தல்கள்  குறித்து  பாஸுக்கும்  பிகேஆருக்கும்  பேச்சு  நடப்பது  பற்றியும்  தமக்குத்   தெரியாது  என்றாரவர்.

அஸ்மின்  சுங்கை  புசாரிலும்  கோலா  சிலாங்கூரிலும்  பிகேஆர்  வேட்பாளர்களைக்  களமிறக்க  விரும்புவதாகவும்  அதற்காக  பாஸை  இடைத்  தேர்தல்களைவிட்டு  ஒதுங்கி  இருக்கச் செய்வதற்கு  அவர்  முயன்று  வருவதாகவும்  வதந்திகள்  உலவுகின்றன.