ஹிஷாமுடின்: மகாதிரின் நிலைப்பாடு நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கிறது

hishamமுன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்கிறார் அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன்.

முன்பு அம்னோ இடைத்தேர்தல்களில் தோற்றுவிடும் என்று சொல்லிவந்த மகாதிர் இப்போது எதிரணி தோற்கும் என்று கூறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

“அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதையோ அவரது நிலைப்பாடு என்ன என்பதையோ என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”, எனத் தற்காப்பு அமைச்சரான ஹிஷாம் கூறினார்.