பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் டிஎபி பன்றிகளைவிட அம்னோ மாட்டு மந்தையை விரும்புவதாக கூறினாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஹாடி அப்படி கூறவில்லை என்றால். அவர் தம்மை தற்காத்துக்கொள்ள அவர் அவ்வாறு கூறியதாக செய்தி வெளியிட்ட நாளிதழுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
“உண்மையில், அவர் அப்படிக் கூறியிருந்தால், அது அதிகப்பிரசங்கித்தனமாகும். ஏனென்றால் அச்சொற்கள் டிஎபியையும் முஸ்லிம் அல்லாத சமூகத்தையும் இழிவுப்படுத்துவதாகும்.
“நாங்கள் இடைத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதனையும் கொண்டிராத போது ஏன் எங்களை இதில் இழுக்கிறீர்கள்”, என்று மாநில சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒரு செய்தியாளார் குவான் எங் கூறினார்.
ஹாடி அவரது திராங்கானு இல்லத்தில் சுங்கை புசார் மற்றும் கோலகங்சார் இடைத் தேர்தல் குறித்து நடத்தப்பட்ட ஓர் அவசரக் கூட்டத்தில் இவ்வாறு கூறியதாக த ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
வர வர இந்த எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதிலேயே மும்முரம் காட்டுகிறார்களே ஒழிய , மக்களைப் பற்றி கவலைப் படுவதாகத் தெரியவில்லை.
எருமை மாடுக்கு அறிவு எங்கே இருக்கு?
????????? மூலை கொண்ட அறிவாளியின் பேச்சு .
என் ஓட்டு பன்றிக்குத் தான்! மாட்டைத் திருடிச் சாப்பிடலாம்! பன்றியைத் திருட முடியாதே!
ஹாடி நீங்கள் கூறுவது சரியே!ஏன் என்றால் உங்கள் இனத்தோடு சேரும் இனவெரியந்தானே நீங்கள் இதில் மாற்று கருத்து இல்லை…எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஒரு வேண்டுகோள்..எப்பொழுதும் ஆளும் கட்சியினை குறை கூறிக்கொண்டு உங்களின் ஒற்றுமையின்மையே காட்டுகிறதே ஒழிய மக்கள் நலன் மீது உங்கள் கவனம் அதிகம் இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது! இதற்கு சான்று நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் நன்கு சிந்தித்து செயல்படவும்