வெனிசூலாவில் உணவுத் தட்டுப்பாடு; கொகோ கோலா உற்பத்தி இடைநிறுத்தம்

venuzவெனிசூலாவில் ஏற்பட்டிருக்கும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக அங்கு செயற்பட்டு வரும் கொகோ கோலா நிறுவனம் அதன் உற்பத்திகளை இடைநிறுத்தியுள்ளது.கொகோ கோலா உற்பத்திக்கு தேவைப்படும் மூலப் பொருட்களுள் 90 வீதமாகத் தேவைப்படுவது சீனியாகும்.சீனிக்கும் அங்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வெனிசூலா நாட்டின் பொருளாதாரம் எரிபொருட்கள் மீதே தங்கி இருக்கின்றது.சார்வதேச ரீதியில் எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடைந்தமையே அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அது பாரிய உணவுத் தட்டுப்பாட்டுக்கு வழி சமைத்துள்ளது. அந்நாட்டின் சந்தையில் சாதாரண மனிதனுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இல்லை.ஆனால்,தேவையற்ற பொருட்கள் மாத்திரம் உள்ளன என்று வெனிசூலா மக்கள் தெரிவிக்கின்றனர்.பொருட்களைத் தேடி மக்கள் சந்தைகளில் குவிந்து நிற்பதைக்கூடக் காணக்கூடியதாக இருக்கின்றது.

வெனிசூலா கடந்த ஐந்து வருடங்களாக இறக்குமதிப் பொருட்களின்மீதே தங்கியுள்ளது.குறைவான அளவிலேயே அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.இந்த நிலையில்,எரிபொருட்களின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டதால் கையிருப்பில் அன்னியச் செலாவணி குறைந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

-http://www.athirvu.com