ரஷியா மீதான பொருளாதார தடைகள் தொடரும்: அமெரிக்கா திட்டவட்டம்

americarussiaஉக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் தொடரும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதுகுறித்து அமெரிக்க பொருளாதாரத் தடைக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஃபிரைடு திங்கள்கிழமை கூறியதாவது:

உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி உதவியதற்காக ரஷியா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் நல்ல பலனை அளித்துள்ளன.

அந்தத் தடைகள் காரணமாகவே, ஐரோப்பிய நாடுகளின் மேற்பார்வையில் உக்ரைன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா இறங்கி வந்தது. ரஷியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருக்காவிட்டால், உக்ரைனின் நிலைமை தற்போது மிகவும் மோசமானதாக இருந்திருக்கும். எனவே, ரஷியா மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும். ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவைப் போலவே அத்தகையப் பொருளாதாரத் தடைகளை நீட்டிக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.
உக்ரைன் சண்டையில் 9,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

-http://www.dinamani.com