சுங்கை புசாரில் வேட்பாளர் நியமனம் முடிந்ததுமே அமனா ஆதரவாளர்கள் டேவான் பெர்னாமுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சரக்குந்தை மேடையாக மாற்றி அமைத்தார்கள்.
அந்த மேடையிலிருந்து பேச்சாளர்கள் பலர் பேசத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவர் வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்.
அமானா குடிமக்கள் பிரகடனத்தை ஆதரிக்கிறது அதனால் தன் வேட்பாளர் அஸ்ஹார் அப்துல் ஷுக்குரைத் தாம் ஆதரிப்பதாக அம்பிகா கூறினார்.