கோலா கங்சார் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் கல்வியாளர் இசாட் புகாரி இஸ்மாயில் புகாரி-க்கு மகளிர் வாக்குகள் கிடைப்பது சந்தேகம்தான்.
அவருடைய சித்தாந்தமே அவருக்கு எதிரியாக அமையும்போல் தெரிகிறது.
ஆண்கள்தான் தலைமை தாங்க வேண்டும். பெண்கள் அவர்களைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவரான இசாட், இடைத் தேர்தலில் போட்டியிடும் தகுதி பெண்களுக்கு இல்லை என்றார்.
“ஆண்களுக்குத்தான் அதற்குத் தகுதி உண்டு. பெண்கள் பலவீனமானவர்கள்”, என அந்த யுஐடிஎம் பேராக் முன்னாள் விரிவுரையாளர் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால், தாம் ஆண்-பெண் வேறுபாடு பார்ப்பதில்லை என்றும் அவர் கூறிக்கொண்டார்.
“நான் பெண்களை நம்புவதில்லை. ஏனென்றால் ஆண்கள்தாம் தலைமை தாங்க வேண்டும். அவர்கள் வீட்டில்கூட தலைமை தாங்குவதில்லையே, பிறகு எப்படி பெரும் காரியங்களைச் செய்வார்கள்”, என்றவர் வினவினார்.
pengal சுகம் டிடி அழிபவர்கள் எங்கே சேவை அவர்கள் சேவை இன்பம் பெற்று கொண்டால் போதும் என்பக்துதான்